இன்று சர்வதேச தாய்மொழி தினம்... உருவானது ஏன்?

International Mother Language Day Clebration

உலகில் உள்ள ஒவ்வொரு மொழியும் அந்தமொழிக்கே உரிய தனித்தன்மையுடன் சிறந்து உள்ளன.மனித சமூகத்தின் ஒவ்வொரு இனத்திற்கும் தன்னுடைய தாய்மொழி அடையாளமாக விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட தாய் மொழியை பாதுகாக்க யுனெஸ்கோ அமைப்பால் உருவாக்கப்பட்டது தான் சர்வதேச தாய் மொழி தினம்.

international mother language day


-அன்றைய பாகிஸ்தானில் 1952ல் டாக்கா பல்கலைக்கழகத்தில் (இன்று வங்கதேசத்தில் உள்ளது) வங்க மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த கலவரத்தில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர் அவர்களின் நினைவாக யுனெஸ்கோ பிப்ரவரி-21ஐ சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்தது.

தாய்மொழியை வணங்குவோம்

உலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில், ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம், மாநிலம், நாடு, கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும், ஒரு தாய்மொழி இருக்கும்.

இவற்றின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பிப்ரவரி-21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் 6-ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ் பேசுபவர்கள் உள்ளனர்.

இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாதம் ஒரு தாய்மொழி அழிவதாகவும், அதனை தடுக்க இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உள்ளத்தில் நேர்மையும்,தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும் -பாரதியார்.

Post a Comment

© Tamil Maayon. All rights reserved. Distributed by TamilMaayon