6G-ஐ கொண்டு வருகிறது ஜியோ....!

6G-ஐ கொண்டு வருகிறது ஜியோ-5G-ஐ விட 100 மடங்கு இன்டர்நெட் வேகம்.

6G-ஐ கொண்டு வருகிறது ஜியோ...!

Jio 6G

5ஜி பயன்பாடு இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராத நிலையில் ஜியோ நிறுவனம் இப்போதே 6ஜிக்கு அடித்தளமிட்டுள்ளது. 6ஜியின் இண்டர் நெட் வேகம் 5ஜியை விட 100 மடங்கு அதிகமாக இருக்குமாம்.

இதனால், அடுத்த தலைமுறை நெட்வொர்க்கான 6ஜி குறித்து ஆராய்வதற்கு Oulu பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுவதாக ஜியோ அறிவித்துள்ளது. 6G -ன் சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

6G-யின் இன்டர்நெட் வேகம்?

  1. 6ஜியை நெட்வொர்க்கைப் பொறுத்தவரையில் வான்வெளி மற்றும் விண்வெளி தகவல் தொடர்புகளை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்

  2. ஹாலோகிராபிக் பீம்ஃபார்மிங், சைபர் பாதுகாப்பு, மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபோட்டானிக்ஸ் ஆகியவற்றில் தொழில் மற்றும் கல்வித்துறைகளில் 3D தொழில்நுட்பம் சார்ந்த நுண்ணறிவை மேம்படுத்தும்.
  3. இதனுடைய இணைய வேகத்தைப் பொறுத்தவரையில் டவுன்லோடிங் வேகம் 1,000 Gbps வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சியடையும் துறைகள்

ஜியோவின் 6ஜி பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் பாதுகாப்பு மற்றும் தொழில்துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பரந்த அளவிலான நுகர்வோர்களை உள்ளடக்க உதவும் 6 ஜி நெட்வொர்க், அதிக திறன் கொண்ட டெராஹெர்ட்ஸ் அதிர்வெண்கள் மூலம் சிறந்த இணைப்புகளை வழங்கும்.


தகவல் பரிமாற்றம் மட்டுமல்லாது இயந்திர உருவாக்கத்திலும், அதன் செயல்பாட்டிலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.


ஜியோ நிறுவனம் என்ன சொல்கிறது?


ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் மூத்த துணைத் தலைவர் ஆயுஷ் பட்நாகர் கூறுகையில், "ஓலு பல்கலைக்கழகத்தில் 6ஜி ஆராய்ச்சியை ஜியோ தொடங்கியுள்ளது. போதுமான தரவுகள் இல்லை என்றாலும், 6G -ன் வேகம் 5G-ஐ விட 100 மடங்கு வேகமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.


சாம்சங்க் நிறுவனம் ஏற்கனவே 1000 ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குதற்கான திட்டத்தை வகுத்து செயல்பட்டு வருகிறது. அந்த ரேஸில் இப்போது ஜியோவும் இணைந்துள்ளது.


6G எப்போது அறிமுகம்?


இன்னும் 2 ஆண்டுகளுக்கு 6 ஜி பயன்பாடு வருவதற்கு வாய்ப்பில்லை. 2024ஆம்ஆண்டு இறுதிக்குள் 6G தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே பயன்படுத்துவதற்கான முயற்சி இந்தியாவில் இப்போது தொடங்கியிருக்கிறது.


இதுகுறித்து தகவல்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது, 6G-க்கான தொழில்நுட்பத்துக்கான பணிகள் இந்தியாவில் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்


1 GB equal to 1024 MB or 1000 MB?

1 bit Bit = 0 Veya 1
1 byte Byte = 8 bit
1 Kilobyte KB = 1024 bytes
1 Megabyte MB = 1024 KB
1 Gigabyte GB = 1024 MB
1 Terabyte TB = 1024 GB
1 Petabyte PB = 1.024 TB
உள்ளத்தில் நேர்மையும்,தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும் -பாரதியார்.

إرسال تعليق

© Tamil Maayon. All rights reserved. Distributed by TamilMaayon